Showing posts with label tamilnadu government. Show all posts
Showing posts with label tamilnadu government. Show all posts

Wednesday, 17 July 2024

ரூ.1000 மகளிர் உரிமை தொகை ஓவர்.. இனி கூடுதலாக ரூ.2000 வருது! மிஸ் பண்ணாதீங்க.. தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு சொன்னபடியே மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுவிட்டது. இதனோடு இன்னும் இரண்டு புதிய திட்டங்கள் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் மக்களின் வங்கி கணக்குகளில் ரூ.2000 வரப்போகிறது. அந்த திட்டங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

நேற்று கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்த 1,48,000 பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டது. இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. நேற்று புதிதாக இணைக்கப்பட்ட பயனாளிகளுக்கு பணம் வழங்கப்பட்டது. கடந்த மாதம் வரை 1.15 கோடி பேர் இந்த தொகையை பெற்றுள்ளனர்; தற்போதும் மேலும் 1,48,000 பேருக்கு இந்த உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு திட்டங்கள்: அரசு பள்ளிக்கு செல்லும் பெண் மற்றும் ஆண் குழந்தைகள் இருந்தால், வீடு தேடி இந்த தொகை ரூ.2000 அளிக்கப்படும். புதுமை பெண் திட்டம் விரிவாக்கம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன.

தமிழ் புதல்வன் திட்டம்: புதுமை பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கடந்த வருடம் தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மாற்றப்பட்டு, உயர்கல்வி உறுதித் திட்டமாக அறிவிக்கப்பட்டது. இதன் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும் தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

யாருக்கு வழங்கப்படுகிறது?: மாணவிகள் இளங்கலை படிப்பு முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் எங்கும் செல்லாமல், நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் இந்த தொகை செலுத்தப்படும். இந்த திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த வருடம் தொடங்கப்பட்டு, ஒரு வருடமாக பணம் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 வாரங்களில் தமிழ் புதல்வன் திட்டமும் தொடங்கப்படும்.

மாணவர்களுக்கு பணம்: புதிய மாணவிகள் அடுத்த மாதம் சேர்க்கப்பட உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.

போதைப் பொருள் நடமாட்டம் என்பது சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்சினை என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

கலைஞர் கனவு இல்லம் திட்டம் மற்றும் இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

பட்ஜெட்: அரசு பள்ளியில் படித்து கல்லூரி சேரும் மாணவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும். இளங்கலை படிப்பு முடிக்கும் வரை மாணவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். மாணவர்கள் எங்கும் செல்லாமல், நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'தமிழ் புதல்வன் திட்டம்' என்று இந்த திட்டத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா விரைவில் நடைபெறும்.

அடுத்த தாம்பரமாக உருவெடுக்கும் சிங்கப்பெருமாள் கோயில்

சென்னையின் முக்கிய வளரும் பகுதியான சிங்கப்பெருமாள் கோயில் சென்னையில், தாம்பரம் வரை உள்ள பகுதிகள்தான் வளர்ச்சி கண்டு இருக்கிறது எ...