சென்னையில், தாம்பரம் வரை உள்ள பகுதிகள்தான் வளர்ச்சி கண்டு இருக்கிறது என்ற பழைய கருத்து மாறி விட்டது. தற்போது, தாம்பரத்தை தாண்டிய பகுதிகளும், சென்னைக்கு நிகராக வளர்ச்சி கண்டு வருகின்றன. இதற்குக் கிடைக்கும் சிறந்த உதாரணமாக செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் இடையே அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோயில் திகழ்கிறது.
சிங்கப்பெருமாள் கோயில்: குடியிருப்பு மையம்
ஐடி நிறுவனங்களை மையமாகக் கொண்ட ஓம்ஆர் மற்றும் ஈசிஆர் பகுதிகளைப் போல அல்லாமல், சிங்கப்பெருமாள் கோயில் பகுதி பல்வேறு குடியிருப்பு தலமாக உருவாகி வருகிறது. இங்கு சிக்கலற்ற போக்குவரத்து திட்டம், கச்சிதமான கட்டமைப்பு ஆகியவை உள்ளதால் குடியிருப்பாளர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. பல்வேறு தொழில் துறைகளின் மக்களும் இங்கு வசிக்கின்றனர். மேலும், மின்சார ரயில் சேவை, மெட்ரோ, மற்றும் விமான நிலைய இணைப்புகள் ஆகியவை இந்த பகுதியைச் சென்னையின் முக்கிய பகுதியாக மாற்றியுள்ளது.
முக்கிய முதலீட்டு வாய்ப்பு: சிங்கப்பெருமாள் கோயில்
ஜிஎஸ்டி சாலையில் சிங்கப்பெருமாள் கோயிலில் இடம் வாங்குவது மிகவும் சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. ரயில்வே ஓவர் பாஸ் உள்ளிட்ட மேம்பாலங்களின் கட்டமைப்பால், இந்த பகுதியின் இடது புறம் மட்டுமின்றி வலது புறத்திலும் வளர்ச்சி வேகம் அடைகிறது.
சிங்கப்பெருமாள் கோயிலின் தனிச்சிறப்புகள்
சிங்கப்பெருமாள் கோயில் பகுதியின் முக்கிய அம்சங்களில் ஒன்றான ரயில்வே ஓவர் பாஸ் மட்டும் இல்லாமல், எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை வர இருக்கும் சென்னை பெரிபெரல் ரிங் ரோடு இந்த பகுதியில் இணைகிறது. மேலும், தாம்பரம்-செங்கல்பட்டு உயர்நிலை சாலை வழித்தடம், ஜிஎஸ்டி சாலையை ஒரகடத்துடன் இணைக்கும் ஒரே பகுதி போன்றவையும் இங்குள்ளன. இதனால், சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே ஓவர் பாஸ் அருகில் அமைந்துள்ள ஜிஸ்கொயர் பவிலியன்ல் வில்லா மனைகள் இரட்டிப்பு மதிப்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி சாலையின் முக்கிய இணைப்புகள்
* சென்னையில் ரயில், சாலை, மெட்ரோ மற்றும் விமான நிலைய இணைப்புகளை வழங்கும் ஒரே சாலை ஜிஎஸ்டி சாலையே.
* பெங்களூர் நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வெளிவட்ட சாலை.
* சென்னை பைபாஸ் மூலம் கொல்கத்தா நெடுஞ்சாலையை அடையலாம்.
* வண்டலூர்-கிளாம்பாக்கம் வழியாக ஓஎம்ஆர்-ஈசிஆர் பகுதிகளுக்கு எளிதில் செல்லலாம்.
* கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வசதியாக உள்ளது.
* எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான வர்த்தக பாதையை இணைக்கும் சென்னை பெரிபெரல் ரிங் ரோடு.
850க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்
சிங்கப்பெருமாள் கோயிலில் மஹிந்திரா, ரெனால்ட்-நிசான், போர்டு மற்றும் BMW போன்ற முக்கிய ஆட்டோமொபைல் மற்றும் டயர் தொழிற்சாலைகள் உள்ளன. மஹிந்திரா வேர்ல்ட்சிட்டி, ZOHO, கேப் ஜெமினி, விப்ரோ மற்றும் இன்போசிஸ் போன்ற ஐடி நிறுவனங்களும் இங்கு உள்ளன.
மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு காணப்படுகிறது. சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளும், சுமார் 850 உற்பத்தித் தொழிற்சாலைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பெருமாள் கோயில் மேம்பாலம்
ஜிஎஸ்டி சாலையில் வலதுபுறம் ரயில்வே பாதை இருப்பதால், இடதுபுற பகுதி வளர்ச்சி கண்டு வந்தது. மேம்பாலங்கள் கட்டப்பட்டதால் ஊரப்பாக்கம், வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர் போன்ற பகுதிகளும் வளர்ச்சி அடைய ஆரம்பித்தன.
சிங்கப்பெருமாள் கோயில் மேம்பாலம், ஜிஎஸ்டி சாலையின் இரு புறத்திலும் இணைப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி மேலும் வளர்ச்சி அடையும் சூழல் உருவாகியுள்ளது.
சென்னையின் வளர்ச்சிக்கு சிங்கப்பெருமாள் கோயில் முக்கிய பங்காற்றுகிறது. ஜிஎஸ்டி சாலையுடன் உள்ள இணைப்புகள், பல்வேறு கட்டமைப்புகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாபெரும் வளர்ச்சியால் பல்வேறு வசதிகள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. இதனால் சிங்கப்பெருமாள் கோயில், மக்கள் வாழ்வதற்கும், புதிய தொழில்கள் அமைக்க ஏற்ற இடமாகவும் மாறியுள்ளது.