Showing posts with label today. Show all posts
Showing posts with label today. Show all posts

Thursday, 18 July 2024

தாம்பரம் பணிமனையில் பொறியியல் பணிகளால் 55 மின்சார ரயில்களின் சேவை ரத்து: ஜூலை 23 முதல் ஆக.14 வரை இயக்கப்படாது

சென்னை: சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஆக.14-ம் தேதி வரை காலை 9.30, 9.56,10.56, முற்பகல் 11.40, நண்பகல் 12.20, 12.40, இரவு 10.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு ஜூலை 23 முதல் ஆக.14-ம் தேதி வரைகாலை 9.40, 9.48, 10.04, 10.12, 10.24,10.30, 10.36, 10.46, 11.06, 11.14,11.22,11.30, 11.50, நண்பகல் 12.00, 12.10, 12.30,12.50, இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரிக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஆக.14-ம் தேதி வரை இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன.


தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு ஜூலை 23 முதல் ஆக.14-ம் தேதி காலை10.30, 10.40, 11.00, 11.10, 11.40, நண்பகல்12.05, 12.35, மதியம் 1.00, 1.30 இரவு 11.40ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டிக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஆக.14-ம் தேதிவரை இயக்கப்படும் மின்சார ரயில், இதுபோல, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரைக்கு காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.


செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு ஜூலை 23-ம் தேதி முதல் ஆக.14-ம் தேதி வரை காலை 11.00, 11.30, நண்பகல் 12.00, இரவு 11.00 ஆகியநேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது. இதுதவிர,கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரைக்குஅதே நாட்களில் இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சிறப்பு ரயில்கள்: இந்த ரயில்களுக்கு மாற்றாக, சென்னை கடற்கரை - பல்லாவரத்துக்கு அதேநாட்களில் இரவு 10.40, 11.05, 11.30 ஆகிய நேரங்களிலும், பல்லாவரம் - சென்னை கடற்கரைக்கு காலை 10.20, 11.00, 11.20, 11.40, நண்பகல் 12.00, 12.40, மதியம் 1.00, 1.20, 1.40, ஆகிய நேரங்களில் சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது

அடுத்த தாம்பரமாக உருவெடுக்கும் சிங்கப்பெருமாள் கோயில்

சென்னையின் முக்கிய வளரும் பகுதியான சிங்கப்பெருமாள் கோயில் சென்னையில், தாம்பரம் வரை உள்ள பகுதிகள்தான் வளர்ச்சி கண்டு இருக்கிறது எ...